Friday, September 19, 2014

வாருங்கள் எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை ... பாடம் - 1

வாருங்கள்  எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை ...   பாடம் - 1

நாம் முதல் பாடத்தில் கணக்கு பதிவியலின் சில அடிப்படை சொற்கள் மற்றும் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கணக்கியல் பற்றிப் படிக்காதவர்களும் நிறுவன கணக்கு பொறுப்புகளை திறம்பட நடத்த டேலி மென் பொருள் உதவுகிறது. இருப்பினும் கணக்கு பதிவியல்  பற்றிய அடிப்படை அறிவும் தேவை. ஆகையால் இந்த பாடத்தில் கணக்கு பதிவியல் அடிப்படை சொற்கள் மற்றும் விதிகளை தெரிந்து கொள்வோம்.


கணக்கு பதிவியல் என்றால் என்ன?

     பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் (அல்லது ) ஒரு இடத்தில் இருந்து வேறு இடம் 
மாறுவதால் ஏற்படக்கூடிய வியாபார நடவடிக்கைகளை சரியாக கணக்கேடுகளில் பராமரிப்பது கணக்கு பதிவியல் எனப்படுகிறது.



கணக்கு பதிவியலில் சில அடிப்படை சொற்கள் :-

         1.   Business Transaction  :  இரு நபர்களுக்கு இடையே   பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ   கை மாறுவதை வியாபார நடவடிக்கை (  Business Transaction )  எனப்படுகிறது. 

         2.   Assets   :  ஒருவரிடம்  அல்லது நிறுவனத்திடம்  சொந்தமாகவுள்ள  பணம், கட்டிடம், நிலம், கருவிகள் போன்றவையும் வரவேண்டிய கடன் தொகையும் சொத்துகள் (Assets)  எனப்படுகிறது. 

         3.   Liabilities  : முதலீடும் ( Capital ), தொழிலில் பிறருக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களும் பொறுப்புகள் (Liabilities)  எனப்படுகிறது.

         4.   Capital   :  ஒரு தொழிலை தொடங்க முதலில் உரிமையாளர் கொடுக்கும் பணம் முதல் அல்லது முதலீடு (Capital)  எனப்படுகிறது.

         5.   Goods  :  நிறுவனத்தில் விற்பதற்காக வாங்கப்படும் அனைத்து பொருட்களையும்  சரக்கு ( Goods) எனப்படும். 

         6.   Debit :  பற்று ( பயன் பெறுதலைக்  குறிக்கும்)

         7.   Credit  : வரவு  ( பயன் கொடுத்தலைக்  குறிக்கும்) 

         8.   Debtor  :  பயனை (பொருளை) கடனுக்கு பெற்று நிறுவனத்திற்கு பணம் தரவேண்டியவரே கடனாளி (  Debtor) ஆவார்.

         9.   Creditor  :  நிறுவனம் பயனை (பொருளை) கடனுக்கு பெற்று திரும்ப  பணம்  பெறவேண்டியவரே  கடன் ஈந்தோர் (  Creditor) ஆவார்.

        10.  Drawing  :  தனது சொந்த பயன்பாட்டிற்கு தொழிலில் இருந்து உரிமையாளர் எடுக்கும் பணம் அல்லது பொருள்  எடுப்பு ( Drawing) எனப்படுகிறது.

        11.  Entry  :  ஒரு வியாபார நடவடிக்கை கணக்கு ஏடுகளில் பதியபடுவது பதிவு ( Entry)  எனப்படுகிறது.

        12.  Ledger  :  பேரேடு ( ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு பெயர் கொடுத்து எழுதுவது )

        13.  Profit & Loss :  இலாபம் & நட்டம்  
        
        14.  Discount  :   தள்ளுபடி 

இந்த வார்த்தைகள் அனைத்தும் கணக்கு பதிவியலின் சில அடிப்படை சொற்கள்.



2 comments:

  1. சூப்பர் எளிதில் கற்றுக் கொடுத்தீர் நன்றி

    ReplyDelete
  2. // 9.Creditor : நிறுவனம் பயனை (பொருளை) கடனுக்கு பெற்று திரும்ப பணம் பெறவேண்டியவரே கடன் ஈந்தோர் ( Creditor) ஆவார்.//
    கடனுக்கு கொடுத்து என்று தானே வர வேண்டும்?

    ReplyDelete