Friday, September 19, 2014

இந்த கணக்கு பதிவியலின் கணக்குகள்  மூன்று பிரிவுகளை  கொண்டுள்ளது.

1. ஆள்சார் கணக்கு (Personal Account):
         
       ஆள்களின் பெயர்களை கொண்டவை ஆள்சார் கணக்கு. இதில்  தனி நபர்கள் ,  நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் பொது நிறுவனங்கள்  பெயர்களை கொண்டவை  ஆள்சார் கணக்குகள் .


2. சொத்து கணக்கு(Real or Asset Account):

      சொத்துகளின் பெயர்களை கொண்டவை சொத்து கணக்குகள் எனப்படும்.
இதில் பணம், நிலம், கட்டிடம் , அறைகலன்கள் ( Furniture ), சரக்கிருப்பு (Stock- in - hand) இவையனைத்தும் அடங்கும்.

3. பெயரளவு கணக்கு(Nominal Account):

     செலவுகள் மற்றும் வருமானங்கள் ஆகியவற்றின் பெயர்களை கொண்டது பெயரளவு கணக்கு. இதில் வாடகை , சம்பளம் , தள்ளுபடி , தரகு (Comission), தேய்மானம் (Depreciation) , விளம்பரம்  ஆகியவை அடங்கும். 


கணக்கு பதிவியலின் அடிப்படை :

          இரண்டு நபர்கள் (நிறுவனங்கள் ) தொடர்பு கொள்வதால்தான் ஒவ்வொரு வியாபார நடவடிக்கையும்  உருவாகிறது . வாங்குபவர் இல்லாமல் விற்பவர் இல்லை. கொடுப்பவர் இல்லாமல் பெறுபவர் இல்லை. இப்படி ஒவ்வொரு  நடவடிக்கையும் இரண்டு பகுதிகளை அடிப்படையாக கொண்டிருக்கும்.
  இதை கணக்கு பதிவியலில் இரட்டை பதிவு முறை ( Double Entry System)   எனப்படும்.

கணக்கு பதிவியலின் அடிப்படை விதிகள் :

1. ஆள்சார் கணக்கு (Personal Account):
             
               பெறுபவரை பற்றில் வை    - Debit : The Receiver.
                தருபவரை  வரவில் வை   - Credit : The Giver.

2. சொத்து கணக்கு(Real or Asset Account):

                உள் வருவனவற்றை  பற்றில் வை             Debit : What comes in.
                வெளிச்செல்வனவற்றை  வரவில் வை   Credit:  What goes out.

3. பெயரளவு கணக்கு(Nominal Account):

                அனைத்து  செலவுகளையும் நட்டங்களையும் பற்றில் வை
                 அனைத்து வருமானங்களையும்  ஆதாயங்களையும் வரவில் வை

             Debit : All Expenses and Losses.
             Credit: All Incomes and Gains.
 
         இங்கு கூறியுள்ள கணக்கு பதிவியலின் அடிப்படை விதிகள் எல்லா நேரத்திற்கும் பொருந்தும் .  இந்த பாடத்திற்கு இந்த விதிகளே அடித்தளம் எனவே நினைவில் வைத்து கொள்வது அவசியம். அடுத்து பாடம் - 2ல் சந்திப்போம்.





No comments:

Post a Comment