Saturday, September 20, 2014

பாடம் - 2

கணக்கு பதிவியலின் மொத்த செயல்பாடுகள் குறித்து சில தகவல்களை இன்று பார்போம்.

கணக்கு பதிவியலில் பயன்படுத்தும் ஏடுகள் (Books of Accounts)

1. குறிப்பேடு  - Journal Entry      

2. ரொக்க ஏடு - Cash Book
             பணம் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

3. விற்பனை ஏடு - Sales Book
             சரக்கு விற்பனை சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

4. கொள்முதல் ஏடு - Purchase Book
            சரக்கு கொள்முதல் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

5. வங்கி ஏடு - Bank Book
           வங்கியில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

6.  இருப்புச் சோதனை - Trial Balance
            ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு நிறுவனத்தின் கணக்கு ஏடுகளிலுள்ள பற்று (Debit) வரவு (Credit) இருப்புகளின் பட்டியலே இருப்புச் சோதனை ஆகும்.

7.  இலாப & நட்ட கணக்கு - Profit & Loss Account
             அனைத்து இலாபங்களும், வருமானங்களும் மற்றும் அனைத்து செலவினங்களும், நட்டங்களும் இடம்பெறும்.           

8. இருப்பு நிலைக் அறிக்கை  - Balance Sheet
              அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் மதிப்பை அறிவதற்கு வணிக ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்படுகின்ற பட்டியலே இருப்பு நிலைக் அறிக்கை ஆகும்.

பொதுவாக கையினால் எழுதபடுகின்ற  கணக்கு பதிவிற்கு முதலில்

நடவடிக்கைகள்( Transactions)   -->  குறிப்பேடு பதிவுகள்(Journal Entries) -->  பேரடு ( Ledgers)  -->  இருப்புச் சோதனை(Trail Balance)  --> வியாபார கணக்கு (Trading Account)  -->  இலாப & நட்ட கணக்கு ( Profit & Loss Account)  -->  இருப்பு நிலைக் அறிக்கை ( Balance Sheet) தயார் செய்வார்கள். இதில் நீங்கள் குறிப்பேடு பதிவுகளில் ஒரு தவறு செய்தால் மொத்த அறிக்கையும் தவறாகிவிடும்.

 ஆனால் இதே விஷயம் டேலியில் செய்வதென்றால்  Groups --> Ledgers (பேரடு)-->  Accounting/ Inventry voucher Entry(குறிப்பேடு பதிவுகள்) செய்தால் போதுமானது. இதில் நீங்கள் குறிப்பேடு பதிவுகளில் ஒரு தவறு செய்தாலும் அந்த தவறை சரி செய்தால் அனைத்து அறிக்கைகளும் தயார் நிலையில் இருக்கும். மேலும் நீங்கள் டேலியில் பணி புரியும் போது இருப்புச் சோதனை(Trail Balance)  --> வியாபார கணக்கு (Trading Account)  -->  இலாப & நட்ட கணக்கு ( Profit & Loss Account)  -->  இருப்பு நிலைக் அறிக்கை ( Balance Sheet)  இந்த அறிக்கைகளை டேலி மென் பொருளே தயார் செய்துவிடும்.

 எப்படி இருந்தாலும் குறிப்பேடு பதிவுகள்(Journal Entries) நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இனி அடுத்த பாடத்தில் இருந்து டேலி மென் பொருளில் பணி புரிவதை பற்றி பார்போம்.


              

No comments:

Post a Comment