Friday, September 26, 2014

LESSON - 5 HELP WINDOW KEYS WORK

இந்த பதிவில் நாம் காண இருப்பது

 1. Select Company,   Shut Company

2.  Date, Period

  3.Company Alter  ஆகியவற்றை பற்றியதே.,


  F1.நிறுவன தெரிவு. (Select Company)

நிறுவன உருவாக்கம் முடிவுற்ற பின் ,நாம் தினசரி பயன்படுத்த உள்ள
செயலே இந்த நிறுவன தெரிவு.

மேலே உள்ள COMPANY INFO MENU- வில் இருந்து F1 KEY அல்லது
 (SELECT CMP)என்ற MENU-வின் HOT KEY " S" - ஐ அழுத்துவதின் மூலம் நாம் நமது நிறுவனத்தை தெரிவு செய்யலாம்.
மேல் உள்ள படத்தின்படி ,நீங்கள் தெரிவு. செய்ய வேண்டிய நிறுவன
முதலெழுத்து M - என்று கொள்வோம்.
தற்போது NAME -பகுதியில் நீங்கள் M - என்று தட்டச்சு செய்துள்ளீர்
என்றால்
டேலி M - ல் ஆரம்பிக்கும் அனைத்து நிறுவனங்களின் பெய்ர்களையும்
இளநீல வண்ணத்தில் தனித்து காண்பிக்கும்.
டேலியின் மாற்றி யோசி :
பொதுவாக கணினியில் மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த 
CURSOR -மேலே செல்வதும் ,கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த 
CURSOR -கீழே செல்வதும் வாடிக்கை.
ஆனால் நிறுவன தெரிவின் போது நிறுவனங்களின் பெயர்களை
இளநீல வண்ணத்தில் தனித்து காண்பிக்கும் நிலையில் மட்டும் மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த CURSOR -கீழே செல்லும்.
கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த CURSOR -மேலே செல்லும்.
அதாவது,மேல் உள்ள படத்தின்படி 
கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த - Model Agencies நிறுவனமும்,மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த - Model Traders நிறுவனமும் தெரிவு செய்யப்படும்.
எனவே உங்கள் நிறுவனம் மேற்பகுதிக்கு அருகாமையில் உள்ளதா அல்லது கீழ்பகுதிக்கு அருகாமையில் உள்ளதா என்பதை பொருத்து எந்த அம்புகுறி KEY உபயோகிக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.
எனவே நிறுவன தெரிவின்போது NAME -பகுதியில் நிறுவனத்தின் பெயர் முழுவதையும் தட்டச்சு செய்ய வேண்டாம்.ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்து பின் ARROW KEY -மூலம் தெரிவு செய்யலாம்.

ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு

பொதுவாக பிற கணக்கியல் மென்பொருளில்( Other Accounting Software) ஒரு சமயத்தில் ஒரு நிறுவனத்தை மட்டுமே OPEN செய்ய இயலும்.OPEN செய்யப்பட்ட நிறுவனத்தை மூடினால் மட்டுமே ,பிற நிறுவனத்தை OPEN செய்ய முடியும்.ஆனால் டேலி மென்பொருளில் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களை தெரிவு செய்ய இயலும்.நீங்கள் தற்போது DEMO AGENCIES -என்ற நிறுவனத்தில் இருப்பதாக கொள்வோம்,அதன் GATEWAY OF TALLY - என்ற MENU-வில் இருந்து F1 -Select Cmp என்ற -KEY அழுத்தி MODEL AGENCIES நிறுவனத்தை தெரிவு செய்யுங்கள்.

இப்போது மேலே உள்ள படத்தில் உள்ளப்படி Model Agencies மற்றும் Demo Agencies என்ற இரு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.ஆனால் இதில் BOLD எழுத்துக்களில் உள்ள Model Agencies -CURRENT WORKING COMPANYஆகும்.  Demo Agencies - READY TO WORK COMPANY ஆக உள்ளது.

ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு செய்வதால் வரும் பயன்கள்:

ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு செய்வதால் இரு பயன்கள் உண்டு.
 
1.ENTRY SCREEN -னில் இருந்தே நிறுவனங்களை மாற்றலாம்
தற்போது நீங்கள் Model Agencies நிறுவனத்தில் VOUCHER ENTRY SCREEN -ல் இருப்பதாக கொள்வோம்.
இதன் HELP WINDOW-வில் F3 -COMPANY என்ற KEY அழுத்தி நீங்கள் Model Agencies நிறுவனத்தில் இருந்து  Demo Agencies -க்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களிலும் DATA ENTRY - செய்யலாம்.
 
2. நிறுவனங்களின் REPORT -களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தற்போது நீங்கள் Model Agencies நிறுவனத்தில் BALANCE SHEET-ல் இருப்பதாக கொள்வோம்.இதன் HELP WINDOW-வில் ALT+C (C : NEW COLUMN) என்ற KEY அழுத்தி Demo Agencies  தெரிவு செய்வதின் மூலம்
இரு நிறுவனங்களின் BALANCE SHEET -களையும் ஒரே திரையில் ஒப்பிட்டு கொள்ளலாம்.

இதனை போலவே மற்ற அறிக்கைகளையும் (PROFIT & LOSS A/C, STOCK SUMMARY ,TRIAL BALANCE ) ஒப்பீடு செய்ய இயலும்
.
F1 .நிறுவன வெளியேற்றம்.(Shut Company)

பொதுவாக ஒரு நிறுவனத்தில் நமது பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், அந்நிறுவனத்தை விட்டு தற்காலிகமாக வெளியேற நாம் பயன்படுத்துவதே
Shut Company. நிறுவனத்தின் GATEWAY OF TALLY MENU -வில் இருந்து ALT + F1
என்ற -KEY யை அழுத்தி அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறலாம்.
F3 .நிறுவன தகவல் மாற்றம் ( Company creation & Alter)

நிறுவன உருவாக்கத்தின் போது,நாம் அளித்த தகவல்களை மாற்றவோ (அல்லது) அளிக்க மறந்த தகவல்களை சேர்க்கவோ பயன்படுவது தான் நிறுவன தகவல் மாற்றம்.

நிறுவனத்தின் GATEWAY OF TALLY MENU -வில் இருந்து ALT + F3
என்ற -KEY யை அழுத்தவும். அதன்பின் வரும் COMPANY INFO MENU -வில் இருந்து ALTER -ஐ தெரிவு செய்யவும்.



பிறகு உங்கள் நிறுவனத்தினை தெரிவு செய்யவும்.
தற்போது நீங்கள் நிறுவன தகவல் மாற்ற திரையில் இருப்பீர்கள்.

இதில் NAME,MAILING NAME,ADDRESS,TELEPHONE,MOBILE,EMAIL.PIN CODE -என அனைத்து தகவல்களையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இதில் மாற்றக் கூடாத தகவல்கள் FINANCIAL YEAR FROM & BOOKS BEGINNING FROM  என்றவையே ஆகும்.இவற்றை மாற்ற முற்பட்டால் தகவல் இழப்பு (DATA LOSS) ஏற்படலாம்.
 தகவல்களை மாற்றியபின் ACCEPT செய்வதின் மூலம்,மாற்றியவற்றை SAVE செய்ய இயலும்.

F2 :  Date  -   நிறுவனத்தின் கணக்கு பதிவுகளின் நடப்பு தேதியை கொடுக்கவும் மாற்றவும் பயன்படுகிறது..

F2 : Period -  நிறுவனத்தின் கணக்கு பதிவுகளின் நடப்பு ஆண்டை  கொடுக்கவும் மாற்றவும் பயன்படுகிறது.
     
அடுத்து MASTER CREATION ல்  GROUP & LEDGER தயார் செய்வது பற்றி பார்போம்.

 

 

TALLY LESSON - 4 COMPANY CREATION

COMPANY CREATION டேலி ERP9 மென்பொருள் தற்போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளது அல்லவா?
  உங்கள் DESKTOP -ல் உள்ள டேலி ஐகானை இருமுறை சுட்டுக.
 

டேலியின் COMPANY CREATION பகுதிக்கு செல்லுமுன் , டேலி -SCREEN STRUCTURE பற்றி அறிவோம்.
 

HELP WINDOW
டேலி மென்பொருளின் ஒவ்வொரு திரையிலும் (SCREENS) உங்களுக்கு உதவ அமைக்கப்பட்டிருப்பதே HELP WINDOW.
இது முழுவதும் FUNCTION KEY மூலம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் மூன்று விதமான  FUNCTION KEY உள்ளது.
 
1. FUNCTION KEY
2.FUNCTION KEY WITH SINGLE UNDERLINE
3.FUNCTION KEY WITH DOUBLE UNDERLINE
இந்த அமைப்பு FUNCTION KEY அல்லாத மற்ற KEY -களுக்கும் பொருந்துவதாக உள்ளது.
உதாரணம்.
INFORMATION WINDOW
 
NAME OF COMPANY

டேலி மென்பொருளில் CURRENT WORKING COMPANY -எது என இங்கே காணலாம்.
 
DATE OF LAST ENTRY
COMPANY-யின் கடைசி ENTRY - தேதியை இங்கே அறியலாம்.
 
CURRENT PERIOD
COMPANY-யின் நிதியாண்டு (FINANCIAL YEAR) -ஐ இங்கே அறியலாம்.
 
CURRENT DATE
டேலி மென்பொருள் ,தேதியை தானாகவே (SYSTEM DATE) க்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளாது.நாம் தான் தேதியை மாற்ற வேண்டும்.
 
WORK WINDOW
 
இந்த WINDOWவை பயன்படுத்துவதின் மூலமாகத்தான், நாம் டேலி மென்பொருள்பயன்படுத்த உள்ளோம்.
 WORK WINDOW- ஐ பயன்படுத்த 3 வழிகள் உள்ளன.
 
1.HOT KEY METHOD
 
WORK WINDOW-வின் ஒவ்வொரு MENU -விலும் ஒரு HIGH LIGHTED CHARACTER -இருக்கும்.
அதை அழுத்துவதின் மூலம் டேலி மென்பொருளை எளிதாக இயக்கலாம்.
உதாரணம்.
Accounts Info -இதில் A என்பது HOT KEY .இதை அழுத்துவதின் இந்த MENU-வை இயக்கலாம். இதை போன்றே அனைத்து MENU -களிலும் HOT KEY அமைந்துள்ளது.
 
2.USING ARROW AND ENTER KEY METHOD
 
UP/DOWN ARROW -க்களை பயன்படுத்தி தேவையான MENU-வை HIGHLIGHT செய்து பின் ENTER KEY -அழுத்தி இயக்கலாம்.
 
3.USING MOUSE
 
தேவையான MENU -வின் மீது இருமுறை சுட்டுவதின் மூலம் இந்த MENU-வை இயக்கலாம்.
 
COMPANY CREATION

COMPANY INFO MENU -வில் இருந்து Create Company -தெரிவு செய்க.
 
தற்போது நீங்கள் COMPANY CREATION MENU -விற்குள் இருப்பீர்கள்.
 
1.DIRECTORY
பொதுவாக DIRECTORY என்பது ,நாம் உருவாக்க உள்ள COMPANY -ஐ கணினியின் எப்பகுதியில் சேமிக்க இருக்கிறோம் என்பதை குறிப்பதாகும். இயல்பாக டேலி மென்பொருள் எங்கே நிறுவப்பட்டுள்ளதோ ,அப்பகுதியிலேயே COMPANY -யும் சேமிக்கப்படும்.
இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை.ஆனால் உங்கள் COMPANY -ஐ மற்றவர் அறியாவண்ணம் ரகசியமாக வைக்க விரும்பினால் BACKSPACE -KEY அழுத்தி ,இந்த பாதையை மாற்றலாம்.ஆனால் ஒவ்வொரு முறையும் SELECT COMPANY -யின் போதும்
BACKSPACE -KEY அழுத்தி பாதையை மாற்ற வேண்டியது கட்டாயமாகும்.
 
2.NAME
இங்கே உங்கள் COMPANY  பெயரை டைப் செய்யுங்கள்.டேலி மென்பொருள் அனுமதிக்கும் நீள அளவு 51 CHARACTERS.
TITLE CASE -என்ற அமைப்பு உள்ளதால் ஒவ்வொரு வார்தையின் முதலெழுத்தும் ,தானாகவே CAPITAL -ஆக மாறும்.
 
3.MAILING NAME
இது உங்கள் நிறுவனத்தின் PRINT NAME ஆகும்.இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
இங்கே கொடுக்கப்படும் பெயரே எல்லா REPORT PRINTOUT -களில் இடம்பெறும்.
 
4.ADDRESS
இங்கே உங்கள் COMPANY  விலாசத்தை டைப் செய்யுங்கள்.இது COMPULSORY FIELD இல்லை,எனவே SKIP செய்துவிடமுடியும். இது முக்கியமான FIELD ஆகும்.விலாசத்தை கண்டிப்பாக டைப் செய்யவும்.
 
5.STATUTORY COMPLIANCE FOR 

 
6.STATE 

 
7.PIN/TELEPHONE/MOBILE/MAIL

இவை OPTIONAL FIELD -என்பதால் SKIP செய்ய விரும்பினால் பரவாயில்லை.
8.AUTO BACKUP
TALLY.ERP9 -ன் புதிய பயன்பாடு இது. தானாகவே டேலி மென்பொருள் நிறுவன டேட்டாவை பிரதி எடுத்து வைத்துக்கொள்ளும்.இது அவசர நேரங்களில் பயன்படும்.
 
9.CURRENCY SYMBOL.
இதுவும் TALLY.ERP9 -ன் புதிய பயன்பாடு.  Rs  -க்கு பதிலாக புதிய CURRENCY SYMBOL தரப்படடுள்ளது. இதற்கான KEY CTRL + 4 ஆகும்.
10.MAINTAIN
உங்கள் நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப ACCOUNTS ONLY /ACCOUNTS WITH INVENTORY -ஐ தெரிவு செய்யலாம்.

11.FINANCIAL YEAR
உங்கள் நிறுவனத்தின் நிதியாண்டு ஆரம்பம் இங்கே தரப்பட வேண்டும்.

12.BOOKS BEGINNING FROM 

உங்கள் நிறுவனம் இந்த ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது எனில் அது 01-04 ஐ தவிர வேறு தேதியானால் இங்கே தரப்பட வேண்டும்.இல்லை எனில் நிதியாண்டு ஆரம்பமே இதற்கும் ஆரம்பம்.

13.TALLY VAULT PASSWORD IF ANY & USE SECURITY CONTROL  இவை இரண்டும் இரு வகையான PASSWORD METHODS. இவற்றை பற்றி வர இருக்கும் பாடங்களில் பார்க்கலாம். எனவே தற்போது இதை SKIP செய்துவிடவும்.
14.BASE CURRENCY INFORMATION.
இந்திய நாட்டுற்கான CURRENCY அமைப்பு ஏற்கனவே சரியாக அமைக்கப்பட்டுள்ளதால் இதில் மாற்றம் செய்ய தேவையில்லை.


மேற்கூறிய அனைதது விவரங்களையும் கொடுத்தபின் டேலி மென்பொருள் இந்த நிறுவனத்தை பதிவு செய்யலாமா என வினவும்.

இதற்கு ENTER அல்லது Y -Key ஐ அழுத்துவதின் மூலம் நிறுவன உருவாக்கம் நிறைவு பெறும்.         
            அடுத்த பகுதியில் GATEWAY OF TALLYயின்  HELP WINDOWவில் உள்ள KEY க் களை பற்றி பார்போம்.         

TALLY LESSON - 3

இரட்டை பதிவு முறையில் குறிப்பேடு பதிவது பற்றி பார்த்தோம். இன்று டேலி பாடத்தை ஆரம்பிப்போம்.
 
டேலி மென்பொருள் (TALLY.ERP9 SOFTWARE) பயில்வதற்கு முன் ,
அதனை பற்றி ஓர் அறிமுகம்

டேலி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் - TALLY SOLUTIONS PRIVATE LIMITED
 
  Director  - Mr.BHARATH GOENKA

டேலி மென்பொருளின் VERSIONS  - Tally ver 4.5  -Tally eis 5.4 -Tally ees 6.3 -Tally ies 7.2 - Tally 8.1 - Tally 9,   Tally.ERP9 

 
டேலி 4.5
FEATURES: DOS BASED - ACCOUNTS ONLY - (INVENTORY MANAGEMENT  NOT AVAILABLE) 

 
டேலி 5.4
FEATURES:  WINDOWS BASED - ACCOUNTS ONLY -ACCOUNTS WITH INVENTORY - INVENTORY ONLY

 
டேலி 6.3
FEATURES: INTERNET ENABLED - CAN SEND REPORTS FROM TALLY THROUGH MAIL 
ACCOUNTS ONLY -ACCOUNTS WITH INVENTORY
 

டேலி 7.2
FEATURES: VAT-TDS-SERVICE TAX 

 
டேலி 8.1
FEATURES: MULTI- LANGUAGE -EXCISE FOR TRADERS -COMPOSITE VAT -FBT
 

டேலி 9
FEATURES: PAYROLL
 

டேலி ERP 9
FEATURES: REMOTE ACCESS -SMS-EXCISE MANUFACTURERS-PAYROLL TAX REPORTS -INCOME TAX
 
டேலி மென்பொருள் பயிற்சி  நிலைகள் .

 
      1.COMPANY CREATION
உங்கள் நிறுவன தகவல்களை(பெயர்,முகவரி,கணக்கு வருடம் முதலியன) டேலி மென்பொருளில் பதிந்து, நிறுவனத்தை உருவாக்கும் செயலே COMPANY CREATION

 
     2.MASTERS CREATION
உங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள்( CUSTOMERS ),விற்பனையாளர்கள் (SUPPLIERS ) ஆகியன உள்ளடங்கிய பேரேடுயென அழைக்கப்படும் LEDGERS- களை உருவாக்குவது ACCOUNTS MASTER CREATION
உங்கள் நிறுவன சரக்குகள்/பொருட்கள் ( STOCK ITEMS) பொருள் வகைகள் (STOCK GROUP), அளவீடுகள் ( UNITS) ,கிடங்குகள் (GO DOWNS)  இவற்றை உருவாக்குவது INVENTORY MASTERS.
உங்கள் நிறுவன பணியாளர்கள் (EMPLOYEES ),அவர்களின் சம்பள பட்டியல் ஆகிய இவற்றை உருவாக்குவது PAYROLL MASTERS.

 
    3.VOUCHERS CREATION
உங்கள் நிறுவன விற்பனை(SALES) கொள்முதல்(PURCHASE), செலுத்துதல்(PAYMENT), பெறுதல் (RECEIPT ),வங்கி நடவடிக்கைகள் ( CONTRA) இது போன்ற தினசரி கணக்குகளை டேலியில் பதிவு செய்வதே VOUCHER CREATION.

 
    4.REPORTS
MASTERS CREATION மற்றும் VOUCHERS CREATION இவற்றை முடித்துவிட்டால் அப்புறமென்ன   இருப்பு நிலை அறிக்கை (BALANCE SHEET ) ,இலாப நட்ட கணக்கு (PROFIT & LOSS A/C )   
 இருப்பு நிலைக்குறிப்பு (TRIAL BALANCE ) ,வங்கி புத்தகம் (BANK BOOK ) ,ரொக்க புத்தகம் (CASH BOOK), தின புத்தகம் (DAY BOOK ) என அனைத்தும் தயார். இவற்றை விரிவாக பார்ப்பதை பற்றியும்,அச்சிடுவதையும் அறிவதே இந்நிலை.

 
    5.ADVANCED FEATURES AND CONFIGURATIONS
டேலி மென்பொருளில் உள்ள (F11 COMPANY FEATURES  AND F12 CONFIGURATION ) இவற்றை பற்றிய விரிவான புரிதலே இந்த பகுதி.

 
சரி, டேலி மென்பொருள் பயில்வதற்கான முதல் நிலை பாடத்தை பார்த்தோம்.அடுத்த பகுதியில் COMPANY CREATION  பற்றி பார்க்கலாம்.
                                    

 


Monday, September 22, 2014

இரட்டை பதிவு முறை

இன்று நாம் சில அடிப்படை குறிப்பேடு பதிவுகள் இரட்டை பதிவு முறையில்  எப்படி பதிய படுகின்றது என்று சில எ.கா (example) மூலம் பார்போம்.
      இரட்டை பதிவு முறை என்பது ஒவ்வொரு நடவடிகையிலிருந்தும் இரண்டு விஷயங்களை எடுத்து ஏற்கனவே சொன்ன மூன்று விதிகளில் எந்த கணக்கில் எந்த விதியில் வருகின்றது என்று பார்த்தால் இரண்டு விஷயங்களில் ஒன்று பற்றாகவும் ஒன்று வரவாகவும் இருக்கும். அது எப்படி என்று இப்பொழுது பார்போம்.
       

1.  மோகன் என்பவர் ரூ.5,00,000 ரொக்கத்தை முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்கினார்.
     
ரொக்க  க/கு           --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று
மோகன் முதல்     --> ஆள்சார் க/கு --> கொடுப்பவர் --> வரவு

                           
                                             ரொக்க  க/கு                        ப       5,00,000.00
                                             மோகன் முதல்                 வ                            5,00,000.00
             
         
2.  ராஜ் என்பவரிடம் ரூ. 1,00,000 ரொக்கத்திற்கு பொருளை  கொள்முதல் செய்தார்.

கொள்முதல் க/கு           --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று
ரொக்க  க/கு                      --> சொத்து க/கு --> வெளிசெல்வது  --> வரவு

                                             கொள்முதல் க/கு            ப    1,00,000.00
                                             ரொக்க  க/கு                       வ                         1,00,000.00

3.  செல்வன் என்பவரிடம் ரூ. 2,00,000 த்திற்கு பொருளை கடனுக்கு கொள்முதல் செய்தார்.

கொள்முதல் க/கு           --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று
செல்வன்   க/கு                --> ஆள்சார் க/கு --> கொடுப்பவர் --> வரவு

                                                   கொள்முதல் க/கு            ப    2,00,000.00
                                                   செல்வன்  க/கு                 வ                         2,00,000.00
   
கடன் கொள்முதல் என்பதால் நபரின் பெயரை எடுத்து கொள்கிறோம்.

4.  ரூ. 50,000 ரொக்கத்தை SBI வங்கியில் நடப்பு கணக்கு ( Current Account ) துவங்கினார்.

   SBI வங்கி  க/கு      -->  ஆள்சார் க/கு --> வாங்குபவர்  --> பற்று
   ரொக்க  க/கு           --> சொத்து க/கு --> வெளிச்செல்வது  -->  வரவு

                           
                                                          SBI வங்கி  க/கு           ப       5,00,000.00
                                                         ரொக்க  க/கு                வ                            5,00,000.00


5.  விளம்பரத்திற்காக   ரூ. 25,000 ரொக்கமாக செலவு செய்தார்.

 விளம்பரம்  க/கு  --> பெயரளவு க/கு --> செலவுகள்  -->  பற்று
ரொக்க  க/கு           --> சொத்து க/கு --> வெளிச்செல்வது  -->  வரவு


                                                          விளம்பரம்  க/கு          ப         25,000.00
                                                           ரொக்க  க/கு                வ                            25,000.00


6.  அறைகலன்கள்  ரூ. 75,000 ரொக்கத்திற்கு வாங்கினார்.

 அறைகலன்கள் க/கு           --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று
ரொக்க  க/கு                             --> சொத்து க/கு --> வெளிசெல்வது  --> வரவு

                                             அறைகலன்கள்  க/கு            ப    75,000.00
                                             ரொக்க  க/கு                              வ                         75,000.00

7.  ரமேஷ்  என்பவரிடம் ரூ. 2,00,000 த்திற்கு பொருளை கடனுக்கு விற்றார்.


ரமேஷ் க/கு                   --> ஆள்சார் க/கு --> வாங்குபவர்  --> பற்று
விற்பனை  க/கு           --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு

                                                ரமேஷ்  க/கு                         ப    2,00,000.00
                                                விற்பனை  க/கு                 வ                         2,00,000.00


8.  ராஜா  என்பவரிடம் ரூ. 3,00,000 த்திற்கு பொருளை ரொக்கத்திற்கு விற்றார்.


ரொக்க  க/கு                  --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று
விற்பனை  க/கு           --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு


                                                ரொக்க  க/கு                        ப       3,00,000.00
                                               விற்பனை  க/கு                 வ                            3,00,000.00

9.  சம்பளமாக ரூ. 12,000 ரொக்கமாக கொடுத்துள்ளார்.

சம்பளம் க/கு        --> பெயரளவு க/கு --> செலவுகள்  -->  பற்று
ரொக்க  க/கு           --> சொத்து க/கு --> வெளிச்செல்வது  -->  வரவு


                                                          சம்பளம்   க/கு                ப         12,000.00
                                                           ரொக்க     க/கு                வ                            12,000.00


10. பொருள் வாங்கியதற்காக செல்வன் அவர்களுக்கு ரூ.2,00,000 ரொக்கமாக கொடுத்துள்ளார்.


 செல்வன்   க/கு           --> ஆள்சார் க/கு --> வாங்குபவர்  --> பற்று
ரொக்க  க/கு                  --> சொத்து க/கு --> வெளிசெல்வது  --> வரவு

                                                செல்வன் க/கு            ப    1,00,000.00
                                             ரொக்க  க/கு                       வ                         1,00,000.00

இன்று நாம் சில அடிப்படை குறிப்பேடு பதிவுகள் இரட்டை பதிவு முறையில்  எப்படி பதிய படுகின்றது என்று சில எ.கா (example) மூலம் பார்த்தோம்.  குறிப்பேடு பதிவுகள் நன்றாக தெரிந்து கொண்டால் நாம் டேலி எளிதாக கற்று கொள்ள முடியும்.

Saturday, September 20, 2014

பாடம் - 2

கணக்கு பதிவியலின் மொத்த செயல்பாடுகள் குறித்து சில தகவல்களை இன்று பார்போம்.

கணக்கு பதிவியலில் பயன்படுத்தும் ஏடுகள் (Books of Accounts)

1. குறிப்பேடு  - Journal Entry      

2. ரொக்க ஏடு - Cash Book
             பணம் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

3. விற்பனை ஏடு - Sales Book
             சரக்கு விற்பனை சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

4. கொள்முதல் ஏடு - Purchase Book
            சரக்கு கொள்முதல் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

5. வங்கி ஏடு - Bank Book
           வங்கியில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

6.  இருப்புச் சோதனை - Trial Balance
            ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு நிறுவனத்தின் கணக்கு ஏடுகளிலுள்ள பற்று (Debit) வரவு (Credit) இருப்புகளின் பட்டியலே இருப்புச் சோதனை ஆகும்.

7.  இலாப & நட்ட கணக்கு - Profit & Loss Account
             அனைத்து இலாபங்களும், வருமானங்களும் மற்றும் அனைத்து செலவினங்களும், நட்டங்களும் இடம்பெறும்.           

8. இருப்பு நிலைக் அறிக்கை  - Balance Sheet
              அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் மதிப்பை அறிவதற்கு வணிக ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்படுகின்ற பட்டியலே இருப்பு நிலைக் அறிக்கை ஆகும்.

பொதுவாக கையினால் எழுதபடுகின்ற  கணக்கு பதிவிற்கு முதலில்

நடவடிக்கைகள்( Transactions)   -->  குறிப்பேடு பதிவுகள்(Journal Entries) -->  பேரடு ( Ledgers)  -->  இருப்புச் சோதனை(Trail Balance)  --> வியாபார கணக்கு (Trading Account)  -->  இலாப & நட்ட கணக்கு ( Profit & Loss Account)  -->  இருப்பு நிலைக் அறிக்கை ( Balance Sheet) தயார் செய்வார்கள். இதில் நீங்கள் குறிப்பேடு பதிவுகளில் ஒரு தவறு செய்தால் மொத்த அறிக்கையும் தவறாகிவிடும்.

 ஆனால் இதே விஷயம் டேலியில் செய்வதென்றால்  Groups --> Ledgers (பேரடு)-->  Accounting/ Inventry voucher Entry(குறிப்பேடு பதிவுகள்) செய்தால் போதுமானது. இதில் நீங்கள் குறிப்பேடு பதிவுகளில் ஒரு தவறு செய்தாலும் அந்த தவறை சரி செய்தால் அனைத்து அறிக்கைகளும் தயார் நிலையில் இருக்கும். மேலும் நீங்கள் டேலியில் பணி புரியும் போது இருப்புச் சோதனை(Trail Balance)  --> வியாபார கணக்கு (Trading Account)  -->  இலாப & நட்ட கணக்கு ( Profit & Loss Account)  -->  இருப்பு நிலைக் அறிக்கை ( Balance Sheet)  இந்த அறிக்கைகளை டேலி மென் பொருளே தயார் செய்துவிடும்.

 எப்படி இருந்தாலும் குறிப்பேடு பதிவுகள்(Journal Entries) நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இனி அடுத்த பாடத்தில் இருந்து டேலி மென் பொருளில் பணி புரிவதை பற்றி பார்போம்.


              

Friday, September 19, 2014

இந்த கணக்கு பதிவியலின் கணக்குகள்  மூன்று பிரிவுகளை  கொண்டுள்ளது.

1. ஆள்சார் கணக்கு (Personal Account):
         
       ஆள்களின் பெயர்களை கொண்டவை ஆள்சார் கணக்கு. இதில்  தனி நபர்கள் ,  நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் பொது நிறுவனங்கள்  பெயர்களை கொண்டவை  ஆள்சார் கணக்குகள் .


2. சொத்து கணக்கு(Real or Asset Account):

      சொத்துகளின் பெயர்களை கொண்டவை சொத்து கணக்குகள் எனப்படும்.
இதில் பணம், நிலம், கட்டிடம் , அறைகலன்கள் ( Furniture ), சரக்கிருப்பு (Stock- in - hand) இவையனைத்தும் அடங்கும்.

3. பெயரளவு கணக்கு(Nominal Account):

     செலவுகள் மற்றும் வருமானங்கள் ஆகியவற்றின் பெயர்களை கொண்டது பெயரளவு கணக்கு. இதில் வாடகை , சம்பளம் , தள்ளுபடி , தரகு (Comission), தேய்மானம் (Depreciation) , விளம்பரம்  ஆகியவை அடங்கும். 


கணக்கு பதிவியலின் அடிப்படை :

          இரண்டு நபர்கள் (நிறுவனங்கள் ) தொடர்பு கொள்வதால்தான் ஒவ்வொரு வியாபார நடவடிக்கையும்  உருவாகிறது . வாங்குபவர் இல்லாமல் விற்பவர் இல்லை. கொடுப்பவர் இல்லாமல் பெறுபவர் இல்லை. இப்படி ஒவ்வொரு  நடவடிக்கையும் இரண்டு பகுதிகளை அடிப்படையாக கொண்டிருக்கும்.
  இதை கணக்கு பதிவியலில் இரட்டை பதிவு முறை ( Double Entry System)   எனப்படும்.

கணக்கு பதிவியலின் அடிப்படை விதிகள் :

1. ஆள்சார் கணக்கு (Personal Account):
             
               பெறுபவரை பற்றில் வை    - Debit : The Receiver.
                தருபவரை  வரவில் வை   - Credit : The Giver.

2. சொத்து கணக்கு(Real or Asset Account):

                உள் வருவனவற்றை  பற்றில் வை             Debit : What comes in.
                வெளிச்செல்வனவற்றை  வரவில் வை   Credit:  What goes out.

3. பெயரளவு கணக்கு(Nominal Account):

                அனைத்து  செலவுகளையும் நட்டங்களையும் பற்றில் வை
                 அனைத்து வருமானங்களையும்  ஆதாயங்களையும் வரவில் வை

             Debit : All Expenses and Losses.
             Credit: All Incomes and Gains.
 
         இங்கு கூறியுள்ள கணக்கு பதிவியலின் அடிப்படை விதிகள் எல்லா நேரத்திற்கும் பொருந்தும் .  இந்த பாடத்திற்கு இந்த விதிகளே அடித்தளம் எனவே நினைவில் வைத்து கொள்வது அவசியம். அடுத்து பாடம் - 2ல் சந்திப்போம்.





வாருங்கள் எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை ... பாடம் - 1

வாருங்கள்  எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை ...   பாடம் - 1

நாம் முதல் பாடத்தில் கணக்கு பதிவியலின் சில அடிப்படை சொற்கள் மற்றும் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கணக்கியல் பற்றிப் படிக்காதவர்களும் நிறுவன கணக்கு பொறுப்புகளை திறம்பட நடத்த டேலி மென் பொருள் உதவுகிறது. இருப்பினும் கணக்கு பதிவியல்  பற்றிய அடிப்படை அறிவும் தேவை. ஆகையால் இந்த பாடத்தில் கணக்கு பதிவியல் அடிப்படை சொற்கள் மற்றும் விதிகளை தெரிந்து கொள்வோம்.


கணக்கு பதிவியல் என்றால் என்ன?

     பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் (அல்லது ) ஒரு இடத்தில் இருந்து வேறு இடம் 
மாறுவதால் ஏற்படக்கூடிய வியாபார நடவடிக்கைகளை சரியாக கணக்கேடுகளில் பராமரிப்பது கணக்கு பதிவியல் எனப்படுகிறது.



கணக்கு பதிவியலில் சில அடிப்படை சொற்கள் :-

         1.   Business Transaction  :  இரு நபர்களுக்கு இடையே   பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ   கை மாறுவதை வியாபார நடவடிக்கை (  Business Transaction )  எனப்படுகிறது. 

         2.   Assets   :  ஒருவரிடம்  அல்லது நிறுவனத்திடம்  சொந்தமாகவுள்ள  பணம், கட்டிடம், நிலம், கருவிகள் போன்றவையும் வரவேண்டிய கடன் தொகையும் சொத்துகள் (Assets)  எனப்படுகிறது. 

         3.   Liabilities  : முதலீடும் ( Capital ), தொழிலில் பிறருக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களும் பொறுப்புகள் (Liabilities)  எனப்படுகிறது.

         4.   Capital   :  ஒரு தொழிலை தொடங்க முதலில் உரிமையாளர் கொடுக்கும் பணம் முதல் அல்லது முதலீடு (Capital)  எனப்படுகிறது.

         5.   Goods  :  நிறுவனத்தில் விற்பதற்காக வாங்கப்படும் அனைத்து பொருட்களையும்  சரக்கு ( Goods) எனப்படும். 

         6.   Debit :  பற்று ( பயன் பெறுதலைக்  குறிக்கும்)

         7.   Credit  : வரவு  ( பயன் கொடுத்தலைக்  குறிக்கும்) 

         8.   Debtor  :  பயனை (பொருளை) கடனுக்கு பெற்று நிறுவனத்திற்கு பணம் தரவேண்டியவரே கடனாளி (  Debtor) ஆவார்.

         9.   Creditor  :  நிறுவனம் பயனை (பொருளை) கடனுக்கு பெற்று திரும்ப  பணம்  பெறவேண்டியவரே  கடன் ஈந்தோர் (  Creditor) ஆவார்.

        10.  Drawing  :  தனது சொந்த பயன்பாட்டிற்கு தொழிலில் இருந்து உரிமையாளர் எடுக்கும் பணம் அல்லது பொருள்  எடுப்பு ( Drawing) எனப்படுகிறது.

        11.  Entry  :  ஒரு வியாபார நடவடிக்கை கணக்கு ஏடுகளில் பதியபடுவது பதிவு ( Entry)  எனப்படுகிறது.

        12.  Ledger  :  பேரேடு ( ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு பெயர் கொடுத்து எழுதுவது )

        13.  Profit & Loss :  இலாபம் & நட்டம்  
        
        14.  Discount  :   தள்ளுபடி 

இந்த வார்த்தைகள் அனைத்தும் கணக்கு பதிவியலின் சில அடிப்படை சொற்கள்.



Thursday, September 18, 2014

 வாருங்கள்  எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை ...  

 என்னுரை 

இன்று நம் அனைவரின் வாழ்கையிலும் கணினி ஒரு அங்கமாக ஆகிவிட்டது.
அனைத்து துறைகளிலும் கணினி முழுமையாக பயன்படுத்தபடுகிறது . இதில் வணிக நிறுவனங்களில் கணக்கு பதிவை கையாள நிறைய மென் பொருள் இருந்தாலும் அதிகமாக பயன்படுத்தபடுவது டேலி மென் பொருள் .


இந்த  டேலி மென் பொருள் வணிக கணக்குகள் மற்றும் சரக்கு மேலாண்மை  ஆகியவற்றை கையாளுவதில் சிறந்த பங்கு வகிக்கிறது. இன்று நிறைய நிறுவனங்கள் (சிறிய, பெரிய) கணக்கு பதிவிற்கு டேலி மென் பொருளை பயன்படுத்துகிறது.

அதிகமான வணிக நிறுவனங்களில் கணக்கு பதிவை கையாள கணக்கியல்  படித்தவர்களை  வேலைக்கு அமர்த்துகின்றனர். இந்த டேலி மென் பொருளை
கையாள கற்று கொண்டால் கணக்கியல்  படிக்காதவர்களும் எளிதாக வணிக நிறுவனங்களில் கணக்கு பதிவை கையாள முடியும். இதை கற்றுக்கொள்ள கல்வி ஒரு தடையல்ல .

நான் என்னுடைய அறிவில் டேலி கற்றதும்  என்னுடைய 13 வருட டேலி அனுபவ அறிவையும்  சேர்த்து  ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். இதில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.

வாருங்கள்  எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை  ........


அன்புடன்,
சந்துரு (எ )சந்திர சேகர்.v